காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை கனகச்சிதமாக செய்து காட்டிய BJP..

Update: 2024-01-09 01:23 GMT

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா வளர்ச்சி அடைந்து வருவது நல்ல மாற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா வளர்ச்சியடைந்து வருவது நல்ல மாற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஒரு வருடத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகத் தெழிரிவித்தார்.


பயங்கரவாதம் குறைந்ததால் சுற்றுலா வளர்ச்சியடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். முன்பு பயங்கரவாதம் அதிகமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வர தயங்கியதாகவும் இப்போது நிலைமை மாறியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அங்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பல முறை தெளிவுபடுத்தியுள்ளதை சுட்டிக்காட்டினார்.


தேர்தல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டிய அவர் இப்போது உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூட கூறியிருப்பதையும், உள்துறை அமைச்சரும் அதே நிலைப்பாட்டை உறுதி செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுவதை பிஜேபி விரும்பவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் உண்மை இல்லை என்றும் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார். முந்தைய காங்கிரஸ் அரசுகளின் மோசமான செயல்பாடுகளால் ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சி தடைபட்டதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News