மண்டி எம்.பி கங்கனா ரணாவத்.. விமான நிலையத்தில் CISF அதிகாரியால் தாக்க பட்டரா?

Update: 2024-06-07 06:12 GMT

ஜூன் 6 ஆம் தேதி நடிகையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்தில் வியாழக்கிழமை ஒரு பெண் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை CISF கமாண்டன்ட் ஒருவர் அவரை அறைந்தார். சண்டிகர் விமான நிலையத்தின் போர்டிங் கேட்டிற்கு நடந்து சென்றபோது, ​​அங்கு அருகே நின்றிருந்த CISF அதிகாரி குல்விந்தர் கவுர் தன்னுடன் தகராறு செய்து தாக்கியதாக கங்கனா ரனாவத் கூறினார் . நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள்? என்று எம்.பி கேட்டதற்கு, CISF கான்ஸ்டபிள் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக பதிலளித்தார்.


மேலும் விவசாயிகள் போராட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்துக்கு அவர் மகிழ்ச்சியடையவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு கங்கனா ரனாவத் மதியம் 3 மணிக்கு விஸ்தாரா விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, ​​நடிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். டெல்லியை அடைந்த பிறகு, மண்டியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி., CISF இயக்குநர் ஜெனரல் நினா சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகளைச் சந்தித்து இந்த விஷயம் குறித்து அவர்களிடம் தெரிவித்தார்.


பின்னர் அவர் இந்த சம்பவத்தை விரிவாக வீடியோ செய்தியை வெளியிட்டார். "தனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதியளித்தார். பக்கத்து கேபினில் இருந்து பெண் பாதுகாப்புப் பணியாளர்களால் தான் தாக்கப்பட்டதை விவரித்த அவர், பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து வருவது குறித்து கவலைப்படுவதாக" கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News