என்ன மனசுய்யா? தென் சென்னை ரியல் ஹீரோக்களை கௌரவித்து அழகு பார்த்த Dr.SG.சூர்யா!

Update: 2024-01-01 01:32 GMT

கடந்த டிசம்பர் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் சென்னையை தாக்கிய மிக்ஜம் புயலால் சென்னை முழுவதும் பெருமழைக் கொட்டு தீர்த்தது. இதனால் மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியதோடு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்ததோடு மழை நீர் சூழ்ந்த வீட்டிற்கு உள்ளே முடங்கி இருந்தனர். இருப்பினும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களுக்கும் பால், தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளும் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அல்லோலப்பட்டனர். அரசு தரப்பில் ஆங்காங்கே நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தபோதிலும் பெரும்பகுதி நிவாரண பொருட்கள் கிடைக்க வில்லை என்று மக்கள் குற்றசாட்டை முன் வைத்தனர். இதனால் மற்ற பிற கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் என பல தரப்பிடமிருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மழை நின்ற பிறகும் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடியாமல் இருந்ததால் தமிழக அரசின் மீது மக்கள் கோபம் அடைந்ததோடு அதிருப்திகளையும் முன் வைத்தனர். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்விற்கு வரும் அமைச்சர்களையும் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் மேலானது அதுவும் சென்னை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப பெரிதும் உதவி புரிந்தவர்கள் அமைதி வீரர்களான தூய்மை பணியாளர்கள். 

அவர்கள் வசித்து வந்த பகுதியிலும் மழை பாதிப்பு ஏற்பட்டிருந்தது அவர்களுக்கு என்றும் தனி குடும்பங்கள் இருந்தது இருப்பினும் அவற்றை விடுத்து விட்டு தலைநகரின் தூய்மைக்காக தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி சென்னையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான வேலையில் இறங்கினர். குவிந்திருந்த குப்பைகள், வடியாத மழை நீர், தேங்கியிருந்த மழை நீர் என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெருவாக தூய்மை செய்து தற்பொழுது சென்னையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்படிப்பட்ட ரியல் ஹீரோக்களை பாராட்டி பெருமைப்படுத்துவதற்காக நம்மோ பவுண்டேஷன் சார்பில் பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அதாவது தென் சென்னை பகுதியைச் சேர்ந்த 150 தூய்மை பணியாளர்களுக்கு அன்ன போஜனம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கும் விழாவை நடத்தி அதில் தூய்மை பணியாளர்களை கௌரவித்துள்ளார். அதுவும் முந்தைய காலங்களில் ராஜாக்களுக்கு வழங்கப்படும் உணவை அன்ன போஜனம் என்று கூறுவார்கள் அப்படிப்பட்ட முறையில் ராஜ சிம்மாசனத்துடன் அரசர்களுக்கு எப்படி உணவு வழங்கப்படுமோ அதேபோன்று தூய்மை பணியாளர்களான அமைதி வீரர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 


இந்த பெருமைமிகு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது மட்டுமின்றி நேரடியாக அதில் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் உணவளித்து நிவாரண பொருட்களையும் வழங்கி தூய்மை பணியாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தார். 

மேலும், நீங்கள் செய்திருக்கும் பணியானது சிறியதல்ல மிகப் பெரிய பணியை செய்திருக்கிறீர்கள் உங்களை பாராட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பொதுவாக நிவாரண பொருட்களை தான் வழங்குவோம் கிட்டத்தட்ட நூறு நிவாரண பொருட்களை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். ஆனால் முதல் முறையாக அன்ன போஜனம் என்கிற விருந்து உணவை வழங்கி உங்களை பாராட்ட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம் என்று எஸ் ஜி சூர்யா அன்ன போஜனம் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களிடம் பேசினார். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டையும் மரியாதைகளையும் பார்த்து சிலிர்த்து தங்களது மகிழ்ச்சிகளையும் தெரிவித்தனர். 

Similar News