இந்தியாவின் G20 தலைமைத்துவம்.. அனைவரையும் உள்ளடக்கிய தன்மையுடன் மக்கள் மையம்..

Update: 2023-09-20 01:40 GMT

புதுதில்லியில் ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் நேற்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உச்சிமாநாட்டின் விளைவுகள் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாராட்டியுள்ள அவர், இது வரவிருக்கும் ஆண்டுகளில் உலக ஒழுங்கை மறுவடிவமைக்க உதவும் என்று நம்பிக்கையை வெளிப் படுத்தியுள்ளார். மாநிலங்களவையின் 261-வது அமர்வின் தொடக்கத்தில் அவையில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், G20-ல் இந்தியாவின் தலைமைத்துவம் உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்று கூறினார்.


இந்த தலைமைத்துவத்தும் 'அனைவரையும் உள்ளடக்கியது, லட்சியம் நிறைந்தது மற்றும் மக்களை மையமாகக் கொண்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜி 20 தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதை 'மக்கள் ஜி 20' ஆக மாற்றிய தொலைநோக்குப் பார்வைக்கு தமது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.


ஒருமனதாகவும் ஒருமித்த கருத்துடனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புது தில்லி ஜி 20 தலைவர்களின் பிரகடனம் குறித்து கருத்துத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், இந்தியாவுக்கான உலகளாவிய அங்கீகாரத்தை சுட்டிக் காட்டினார். பிளவுகள் நிறைந்த உலகில் அமைதி மற்றும் நிதானத்தின் குரலாக இந்தியாவை இந்த பிரகடனம் அங்கீகரித்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார். இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி குறித்து குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், இதுபோன்ற பல முன்முயற்சிகள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News