தேசிய அளவு ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackStalin முதலிடம் - கொதித்தெழுந்த கோவைவாசிகள்!

Update: 2021-11-22 05:34 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு செல்லும் போதெல்லாம் தொடர்ந்து ட்விட்டரில் #GoBackStalin ட்ரெண்ட் ஆவது வழக்கமாகி வருகிறது. 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க படுதோல்வி அடைந்தது.

2001-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதலே தி.மு.க தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து கோவிட் சமயத்தில் தடுப்பூசி வழங்குவதில் கோவைக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, தொடர் தேர்தல் தோல்விகளால் கோவை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகிறது என கோவை மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சமீபத்தில் தேர்தலில் தோல்வி அடைந்ததால் மக்களை தி.மு.க அரசு பாடுபடுத்துவதாக தெரிவித்து இருந்தார்.

கடந்த 7 மாதங்களாக தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வரும்போதெல்லாம் ட்விட்டரில் தொடர்ந்து #GoBackStalin ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதேபோல் இன்றும் முதல்வர் கோவைக்கு செல்ல திட்டம் இருக்க, தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகவே, செய்வதறியாது திகைக்கிறது தி.மு.க தரப்பு.


Cover Image Credits - The True Picture

Similar News