திரௌபதி அம்மன் கோவிலை பூஜைக்காக திறக்கலாம்.. நீதிமன்றம் HRCE-க்குஉத்தரவு..

Update: 2024-03-21 15:00 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலை வழக்கமான பூஜைக்காக திறக்க, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க பக்தர்களை கோயிலுக்குள் செல்ல நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. பா.ம.கவின் சட்டப் பிரிவு தலைவர் கே.பாலு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். 2023 ஜூன் மாதம், தாழ்த்தப்பட்ட சாதியினரின் நுழைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், கோவில் மூடப்பட்டது.


"பூசாரிகள் உள்ளே நுழைந்து பூஜை செய்ய மட்டுமே கோவில் திறக்கப்படும், பூஜை முடிந்த பிறகு கோவில் மூடப்பட்டிருக்கும்" என்று நீதிபதி திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறினார். மேலும், இந்த நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


"சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, போதிய எண்ணிக்கையில் போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று விழுப்புரம் காவல் கண்காணிப்பாளருக்கு (SP) நீதிபதி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை இடைக்கால ஏற்பாடு தொடரும் என்றும், இது அந்தந்த தரப்பினரின் உரிமையையும், தற்போதுள்ள பூசாரின் உரிமையையும் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News