மழுப்பும் காங்கிரஸ்! பல்டி அடித்த IND கூட்டணியை சேர்ந்த அகிலேஷ் யாதவ்!

Update: 2024-01-02 16:13 GMT

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் மற்ற மிக முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராமர் கோவிலின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு கும்பாபிஷேக அழைப்பிதழ்கள் IND கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் பாலசகோப் தாக்கரே சிவசேனா கட்சி போன்ற கட்சிககளுக்கு வழங்கப்பட்டுள்ளதும் இவர்கள் அனைவரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளபோவதில்லை என்று தெரிவித்துள்ளதும் பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் காங்கிரஸ் தரப்பில் இந்த விழாவிற்கு இன்னும் பல நாட்கள் இருக்கிறது அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் மழுப்பி வருகின்றனர். அதே சமயத்தில் உத்திரபிரதேசத்தின் மிக முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவும் அவரது மனைவியும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். 

அகிலேஷ் யாதவ், "இது கடவுளின் விழா முதல்வர் ஒன்றும் கடவுளை விட பெரியவர் இல்லை! அதனால் கடவுள் ராமரால் அழைக்கப்பட்டால் நிச்சயம் விழாவிற்கு செல்வார்கள்" என்றும் அகிலேஷ் யாதவ் மனைவி எம்பி டிம்பிள் யாதவ் "அழைப்பு கிடைத்தால் நிச்சயமாக விழாவில் கலந்து கொள்வேன்" என்றும் அறிவித்துள்ளனர். 

Source : Dinamalar 

Similar News