இந்திய கடற்படையுடன் இணைந்த INS இம்பால்.. இந்தியா பெருமை கொள்ளும் தருணம்..

Update: 2023-12-28 01:18 GMT

ஐஎன்எஸ் இம்பால் கடற்படையில் இணைக்கப்பட்டது, இந்தியாவுக்கு பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராட்டி பேசி இருக்கிறார். இந்தியா கடற்படை தன்னுடைய வலிமை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கு தற்போது நடந்து இருக்கும் இந்த ஒரு நிகழ்வு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். இந்திய கடற்படைக்கு வலு சேர்க்கும் விதமாகவும் மேலும் நமது கடல் வளங்களை பாதுகாக்கும் முயற்சியில் இந்திய கடற்படை முழுமூச்சாக ஈடுபடும் என்றும் நாம் இனி உறுதியாக கூறலாம்.


ஐஎன்எஸ் இம்பால் நேற்று நமது இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னிறைவைப் பாராட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இது பற்றி கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.



 



சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது, "ஐஎன்எஸ் இம்பால் நமது கடற்படையில் இணைக்கப்பட்டது, இந்தியாவுக்குப் பெருமையான தருணம். இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னிறைவுக்குச் சான்றாகும். நமது கடற்படையின் சிறப்பையும், பொறியியல் திறமையையும் இது பறைசாற்றுகிறது. தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள். நமது கடல்களைப் பாதுகாத்து, நமது தேசத்தை வலுப்படுத்திக் கொண்டே இருப்போம்" என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News