இலவச பேருந்தே வேண்டாம்.. சரியாக பேருந்து வந்தால் போதும்.. காங்கிரஸ் MLA-விடம் குமுறிய பெண்கள்..

Update: 2024-06-16 11:50 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் MLA வாக இருப்பவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன். இவர் தன் தொகுதியில் நடக்கும் பிரச்சனைகள் குறித்த ஆய்வு செய்தார். அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை நாங்குநேரி பேருந்து நிலையம் மற்றும் அங்குள்ள கழிவறையை ஆய்வு செய்ய வந்தார். அப்போது மூன்று வருடங்களாக பழுதடைந்து கிடக்கும் பேருந்து நிலைய கழிவறையை சரி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார்.


அப்போது நாங்குநேரி ஊருக்குள் நீண்ட நாட்களுக்கு பிறகு MLA வந்ததை அறிந்த நாங்குநேரி ஊர் பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்த பெண்களும் ரூபி மனோரனை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். நாங்குநேரி ஊருக்குள் முறையாக அரசு பேருந்துகள் வரவில்லை எனவும், பெரும்பாலான பேருந்துகள் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன. அனைத்து அரசு பேருந்துகளும் நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்ல உங்களிடமும், போக்குவரத்தை துறை சார்ந்த அதிகாரிகளிடமும் பல முறை நேரில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பேருந்தே வராத பேருந்து நிலையத்திற்கு கழிவறை எதற்கு? என்று பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அது மட்டும் இல்லாமல் திமுக ஆட்சியில் கொண்டு வந்த கட்டணமில்லா பேருந்தே வேண்டாம், சரியான நேரத்திற்கு பேருந்து வர ஏற்பாடு செய்தால் போதும் என காங்கிரஸ் MLA ரூபி மனோகரனை முற்றுகையிட்டு பெண்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News