நமோ ஆப்பில் 'ஜன் மேன் சர்வே'.. உங்கள் தொகுதி MP எவ்வாறு பணியாற்றினர்? மோடி அரசின் நேரடி ஆய்வு..

Update: 2023-12-20 01:40 GMT

நமோ ஆப்பில் 'ஜன் மேன் சர்வே' தொடங்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால் சாதாரண மனிதனின் மனநிலை அரசாங்கத்தை பற்றி எப்படி இருக்கிறது? மற்றும் அரசாங்கம் மக்களுக்காக வேலை செய்கிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்த வேலையை கச்சிதமாக செய்கிறார்களா? என்பதை ஆராயும் ஒரு தளமாக தற்போது இந்த சர்வே காணப்படுகிறது. இதில் மோடி அரசு மற்றும் எம்.பி.க்களின் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. பாஜக எப்போதும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மீடியாவை, குறிப்பாக சமூக ஊடகங்களின் சக்தியை, மக்களை இணைக்க, ஊக்கப்படுத்த பயனுள்ள கருவிகளாகப் பயன்படுத்துகிறது. மக்களிடம் தற்போது வரப்பிரசாதமாக கிடைத்துள்ள தொழில்நுட்பத்தை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அரசின் அனைத்து செயல்பாடுகளும் எந்த விதமான ஒழிவு மறைவும் இன்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மோடி அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறது.


பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதில் முன்னிலை வகித்து வருபவர். பிரதமர் எவ்வாறு நாட்டு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார் என்பதற்கு நமோ (NaMo App) செயலி முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மக்களை நேரடியாக தொடர்பு கொள்வதில் இந்த செயலியானது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் குறித்த அர்த்தமுள்ள விவாதங்களில் பிரதமர் மோடி நேரடியாக குடிமக்களுடன் ஈடுபடும் தளமாக ‘நமோ ஆப்’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில், நமோ ஆப்பில் புதிதாக தற்பொழுது 'ஜன் மேன் சர்வே' என்ற புதுமையான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.


இதில் பாஜக அரசு மற்றும் எம்.பி.க்களின் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. எம்.பி.க்கள் எவ்வாறு பணியாற்றினர்? அவர்கள் மீது மக்களுக்கு என்ன கருத்து உள்ளது? என்பதையும் நேரடியாக இந்த ஒரு கணக்கெடுப்பின் மூலம் பிரதமர் மோடி அறிந்து கொள்ள முடியும். அது மட்டும் கிடையாது மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை எப்படி இருக்கிறது?

இன்னும் எந்த மாதிரியான சலுகைகளை பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் இதில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருக்கிறது. குடிமக்கள் எளிதில் பதிலளிக்கக்கூடிய கேள்விகளின் தொகுப்புகள் ஜன் மேன் கணக்கெடுப்பில் உள்ளன. ஆளுகை மற்றும் தலைமைத்துவத்தின் பல்வேறு அம்சங்களில் அவர்களின் மாறுபட்ட கருத்துக்களை சேகரிக்கிறது. கருத்துக்கணிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் பயனர் நட்பாகும். ஜன் மேன் கணக்கெடுப்பின் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் உங்கள் பகுதி எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த தங்கள் கருத்துக்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள பயனரை அனுமதிக்கிறது.


இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். சர்வேயில் கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜன் மேன் சர்வேயில் பத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் இடம் பெற்று இருக்கிறது இதில் பிரபலமான கேள்விகள்,

1) மோடி அரசின் ஒட்டுமொத்த செயல்திறனை எப்படி மதிப்பிடுவீர்கள்?        2) மோடி அரசின் திட்டங்களால் நீங்கள் பயனடைந்தீர்களா? 3) உங்கள் தொகுதியில் கீழ்கண்டவற்றின் நிலை குறித்து உங்கள் திருப்தியை மதிப்பிடுங்கள்? இதில், சாலைகள், மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள், சட்டம்-ஒழுங்கு, தூய்மை ஆகியவை குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.

Input & Image courtesy:News

Tags:    

Similar News