பாஸ்ட் ட்ராக் குறித்த சிக்கல் இனிமேல் கிடையவே கிடையாது!! NHAI-ன் புதிய செயல்முறை அறிமுகம்!!
பாஸ்ட் ட்ராக் பயனாளர்களுக்காக Know Your Vehicle (KYV) செயல்முறையை தற்பொழுது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எளிமையாக மாற்றியுள்ளது. இந்த நடைமுறையானது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வாகனங்களின் பாஸ்ட் ட்ராக் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் வாகனத்தின் உரிமையாளர்கள் ஆவணங்கள் மற்றும் வலைதள பிழைகளால் சில இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் சிலருடைய பாஸ்ட் ட்ராக் திடீரென்று முடக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் செயல்முறைகளால் சேவைகள் உடனடியாக நிறுத்தப்படாது என்றும், KYV நிறைவு செய்வதற்கு பயனாளர்களுக்கு போதிய நேரம் அளிக்கப்படும் என்றும், இதில் வாகனத்தின் பக்க படங்கள் எதுவும் தேவையில்லை முன் படம் மட்டுமே போதுமானது என்று மிகவும் எளிதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையால் பயனாளர்களின் வாகன எண்ணையோ அல்லது மொபைல் எண்ணையோ உள்ளிட்டால் VAHAN தரவுத்தளத்திலிருந்து RC விவரம் வந்துவிடும் என்றும், பல வாகனங்கள் ஒரு மொபைல் நம்பரில் இணைக்கப்பட்டு இருந்தால் தேவையான வாகனத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. KYV விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் வரை அளிக்கப்படும் பாஸ்ட் ட்ராக் புகார்கள் பெறப்படாதவரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பயனால் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 1033 என்ற நெடுஞ்சாலை ஹெல்ப்லைனுக்கு அழைத்து புகார் அளித்துக் கொள்ளலாம். வாடிக்கையாளருக்கு தேவையான வசதிகளை வங்கிகள் செய்து தர வேண்டும் என்றும், இதனால் எதிர்காலத்தில் தடையற்ற டோல் வசூல் முறை முன்னேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக NHAI தெரிவித்துள்ளது.