முதல்வர் எவ்வளவு சொல்லியும் அடங்காமல் திரிகிறார் நிதி அமைச்சர் #PTR - தி.மு.க மூத்த தலைவர் கடும் தாக்கு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முறை அறிவுரை வழங்கியும், தொடர்ந்து ஊர் வம்புக்கு சொல்கிறார் தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் என தி.மு.க மூத்த தலைவர் சொல்லி இருப்பது தி.மு.க வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க எம்.பி-யும் மூத்த தலைவருமான TKS இளங்கோவன் இன்று India Ahead ஆங்கில தொலைகாட்சியின் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிஷங்கருக்கு அளித்த பேட்டியில் "பல முறை முதல்வர் நிதி அமைச்சரை எச்சரித்திருக்கிறார், அறிவுரை வழங்கி இருக்கிறார். அதையும் மீறி, தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் ஊர் வம்புக்கு தொடர்ந்து செல்வது சரியல்ல, இரு ஆளுங்கட்சி இவ்வாறு செய்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள்." என தெரிவித்து இருக்கிறார்.
GST கவுன்சில் கூட்டத்திற்கு செல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றது, எதிர்கட்சி தலைவர்களை ட்விட்டரில் மட்டமாக விமர்சிப்பது என தொடர்ந்து ஒரு அமைச்சரை போல செயல்படாமல், தெரு போராளி போல் தமிழக நிதி அமைச்சர் தொடர்ந்து இயங்கி வருவது தி.மு.க தலைமையை முகம் சுளிக்க வைத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.