"நிதி அமைச்சர் #PTR, GST கூட்டத்துக்கு செல்லாதது தவறு" - சாட்டையை சுழற்றும் தி.மு.க தலைமை!

Update: 2021-09-22 07:30 GMT

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, 45-வது GST கூட்டம் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. சுமார் 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பும் இந்த கூட்டத்தில் நடந்தது. இந்த முக்கிய கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகின.

ஆனால், தமிழக நிதி அமைச்சர் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, இக்கூட்டத்திற்கு செல்லாமல் தவிர்த்து விட்டார். இது தமிழக மக்களிடமும், எதிர்கட்சியிடமிருந்தும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்து, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை "முக்கியமான இந்த கூட்டத்திற்கு ஏன் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செல்லவில்லை என தமிழக மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறியதோடு #பதில்சொல்திமுக எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக நிதி அமைச்சர் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளாதது தவறு என தி.மு.க மூத்த தலைவர் தெரிவித்து இருப்பது, நிதி அமைச்சருக்கு எதிராக தி.மு.க தலைமை சாட்டையை சுழற்றுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

தி.மு.க எம்.பி-யும் மூத்த தலைவருமான TKS இளங்கோவன் இன்று India Ahead ஆங்கில தொலைகாட்சியின் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிஷங்கருக்கு அளித்த பேட்டியில் "நிதி அமைச்சர் இந்த கூட்டத்திற்கு கண்டிப்பாக சென்று இருக்க வேண்டும். ஏன் செல்லவில்லை என்று தெரியவில்லை. மாநில நிதி அமைச்சர்களுக்கு இது ஒரு முக்கியமான கூட்டம். இதை புறக்கணித்தால் மாநில நலன் பாதிக்கப்படும்" என கடுமையான விமர்சனங்களை தமிழக நிதி அமைச்சர் மீது வைத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் SG சூர்யா "#GST கூட்டத்திற்கு தமிழக நிதி அமைச்சர் #PTR செல்லாதது தவறு என அண்ணாமலை அண்ணன் சொன்ன போது எதிர்த்த தி.மு.க-வினரே, உங்கள் மூத்த தலைவரும் எம்.பி-யுமான திரு.TKS இளங்கோவன் "PTR, GST கூட்டத்திற்கு செல்லாதது தவறு, இது மாநில நலனுக்கு நல்லதல்ல!" என்கிறார். அவரையும் திட்டி தீர்ப்பீரோ?" என காட்டமான விமர்சனத்தை தனது ட்விட்டர் பதிவின் மூலம் வைத்துள்ளார்.

ஏற்கனவே, பழனிவேல் தியாகராஜன் மீது முதல்வர் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தி.மு.க மூத்த தலைவர் ஒருவர், நிதி அமைச்சர் மீது கடும் விமர்சனங்களை வைத்து இருப்பது அவரை கட்டம் கட்ட தான் என மூத்த உடன்பிறப்புகள் அறிவாலய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.

Tags:    

Similar News