உலகம் முழுவதும் அபாய கட்டத்தில் உள்ள வீரியமான கொரோனா வைரஸ் : WHO அறிவுரை!

Update: 2021-07-05 01:30 GMT

தற்பொழுது உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவும் டெல்டா என்னும் வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் அபாய கட்டத்தில் உலக நாடுகள் இருக்கின்றது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ் தற்போது சுமார் 98 நாடுகளில் பரவி உள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் அவர்கள் கூறுகையில், பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். 


இது போன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது. டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். ஆரம்பத்தில் நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.


இதுபோன்ற செயல்களால் டெல்டா என்னும் வீரிய கொரோனா வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஆண்டின் இறுதிக்குள் உலகில் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு நாடும் 10% நபர்களுக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு நாட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என்று அவர் கூறினார்.

Similar News