1 கோடி இளைஞர்களுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி : மத்திய பட்ஜெட் 2024

Update: 2024-07-23 06:37 GMT

மத்திய பட்ஜெட்டில், 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு பீகாரில் புதிய விமான நிலையம் மற்றும் சாலைகள் அமைக்கப்படும். நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு,

பிரதமரின் நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு,

முத்ரா கடன் 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ஆக உயர்வு,

ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு,

உள் கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கு ரூபாய் 11 லட்சம் கோடி ஒதுக்கீடு,

அதுமட்டுமின்றி, தொழில் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்காக மாதம் ரூபாய் 5,000 மற்றும் ரூபாய் 6,000 சிஎஸ்ஆர் நிதியிலிருந்து தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும், இலவச சூரிய ஒளி திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு தலா 300 யூனிட் மின்சாரம் இலவசம் மற்றும் இந்தியாவில் உள்ள 500 டாப் நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News