வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால ஐம்பொன் சிலைகள் மீட்பு - 400 ஆண்டுகால மதிப்பு வாய்ந்தது!
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் மீட்டெடுக்கப் பட்டு இருக்கிறது.
சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டில் பதுக்கி இருந்த பழங்கால சிலைகள் 10 தற்பொழுது பருமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை அண்ணாமலைபுரம் ஏழாவது மெயின் ரோட்டில் குறுக்கு தெருவில் வசிப்பவர் தான் சோபனா என்பவர், இவருடைய வீட்டில் பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் தற்போது பதிக்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பெயரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் அவருடைய வீட்டில் 10 பழங்கால சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக அரசு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த சிலைகள் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் ஆகும். இவை ஐம்பொன் சிலை ஆகும். அந்த சிலைகள் பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளரிடம் இருந்து அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த சிலைகள் வாங்கியதற்கு சோபனா முறையான கணக்கு வைத்திருந்தார்.
மேலும் இந்த சிலைகளை விற்பனை செய்வது தனது நோக்கம் இல்லை என்று அவர் போலீசிடம் தெரிவித்தார். இதனால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பழமையான சிலைகள் என்பதால் அவற்றில் போலீசார் பறிமுதல் செய்தனர். செய்யப்பட்ட சிலைகள் விநாயகர் சிலை, அம்மன் சிலை, துறவி சிலை, சிவன் பார்வதி இணைந்த சிலை போன்ற பல்வேறு சிலைகள் அவருடைய வீட்டில் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi News