பத்து கோடி ஏழைப் பெண்கள் வீடுகளில் விறகடுப்பு ,காற்று மாசு ,புகை இல்லாத சமையல் - மோடி அரசின் சாதனை!

மோடி மோடி அரசின் மகத்தான சாதனையால் இன்று 10 கோடி ஏழைப் பெண்கள் விறகு இல்லா இல்லா புகையில்லா சமையலுக்கு மாறி பயன்பெற்றுள்ளனர்.

Update: 2024-01-12 10:15 GMT

வீடுகளில் விறகு அடுப்பு வைத்தும் கரி அடுப்பு வைத்தும் சமையல் செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு அதிலிருந்து வரும் புகையால் கண்ணீர் விட்டு கொண்டு வேலை செய்யும் நிலை ஏற்படும். மேலும் மரம் வளர்ப்போம் மழை வளம் சேர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் விறகுக்காக மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இந்த நிலையில் பெரிய வரப்பிரசாதமாக கியாஸ் சிலிண்டர் வந்து சமையல் செய்யும் இல்லத்தரசிகளின் வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது .புகையில்லா சமையல் கஷ்டம் இல்லாத சமையல் என்று பெண்கள் கருதினர். ஆனால் சமையல் கியிஸ் சிலிண்டர் பெற டெபாசிட் தொகை ,இணைப்பு கட்டணம் கட்ட வேண்டும். அதன் பிறகு சிலிண்டருக்கும் விலை இருக்கிறது. இவ்வளவு தொகையை கட்ட முடியாத ஏழை குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.


இப்படிப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்காக டெபாசிட் இணைப்பு கட்டணமும் இல்லாமல் கியா சிலிண்டர் இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது .இந்த திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்து சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஐந்து கோடி பெண்களுக்கு இந்த இலவச சிலிண்டர் இணைப்பு வழங்குவது தான் இலக்காக இருந்தது. அவ்வப்போது இந்த திட்ட காலம் நீட்டிக்கப்பட்டு இணைப்புகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் 2025 - 2026 ஆம் நிதி ஆண்டு வரை நீட்டிக்கவும் கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் அந்த மூன்று ஆண்டு முடிவில் இந்த திட்ட பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சம் ஆக உயரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மிக வேகமாக இணைப்புகள் வழங்கப்பட்டு மிகப்பெரிய சாதனையாக இப்போது 10 கோடிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.


சில நாட்களுக்கு முன்பு அயோத்தி ரயில் நிலையத்தையும் புதிய விமான நிலையத்தையும் திறப்பதற்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடியாவது இணைப்பைப் பெற்ற மீரா மாஞ்சி என்ற மீனவ பெண்ணின் வீட்டுக்கு சொல்லிக் கொள்ளாமலேயே சென்றார். அந்த வீட்டில் 15 நிமிடங்கள் இருந்த பிரதமர் அந்த பெண் கொடுத்த டீயை மகிழ்ச்சியுடன் குடித்துவிட்டு அவர்களுடன் சற்று நேரம் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார். நாட்டில் இப்போது 10 கோடி ஏழைப் பெண்களால் வீடுகளில் மண்ணெண்ணெய் ,விறகடுப்பு ,காற்று மாசு, புகை ஆகியவை இல்லாமல் சமையல் செய்ய முடிகிறது என்பது பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனையாகும்.


SOURCE :DAILY THANTHI

Similar News