இலங்கையில் இன்று முதல் 10 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பல தொழிற்சாலைகள் முற்றிலும் முடங்கி பல லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து மிகப்பெரிய இன்னலுக்கு தள்ளப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய உணவு வகைகளின் பொருட்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பல்வேறு நாடுகளிடம் இலங்கை கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கின்ற முயற்சியில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ச்சியாக 10 மணி நேரம் இன்று முதல் மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy:Capital News