100% இந்தி தெரிந்தவர்களாக மாறும் கேரளா கிராமம் - எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நடந்த அதிசயம்!

தமிழகத்தை போன்று கேரளாவிலும் இந்தி எதிர்ப்பு அதிகமாக இருந்தது, இருந்தாலும் கேரளாவை சேர்ந்த கிராமம் ஒன்று 100 சதவீதம் இந்தி தெரிந்தவர்களாக மாறி இருக்கிறது.

Update: 2022-10-25 05:17 GMT

தமிழகத்தில் தற்பொழுது இந்தி எதிர்ப்பு என்பது அதிகமாக இருந்து வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தி கட்டாயமாக்க கூடாது என்று கூறி வருகிறார்கள். ஆனால் மாணவர்களிடையே விருப்பமான மொழி பாடமாக இந்தி இருக்கலாம் என்று தான் கூறப்படுகிறது. கேரளாவிலும் இதே நிலைமை தான் இந்தி படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது அங்குள்ள அரசாங்கம் இந்நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் சிறிய ஊராட்சி தான் செலன்னூர் என்ற கிராமம்.


இந்த கிராமம் முழுவதும் மக்கள் அனைவரும் ஹிந்தி கற்று தெரிந்து இருக்கிறார்கள். இதில் முக்கியமாக ஜானகி அம்மா என்று 70 வயது கடந்த மூதாட்டையும் ஆசிரியர் மூலம் ஹிந்தி கற்று வருகிறார். இதன் மூலமாக இந்த ஆண்டு குடியரசு தினத்திற்கு முன்பாக இந்த கிராமம் முற்றிலும் இந்தி தெரிந்தவர்களை கொண்ட கிராமமாக மாறும் என்று அந்த கிராமத்தின் ஊராட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள். அவர் அறிவிக்கப்பட்டால் அது கேரளாவின் முதல் கிராமம் மட்டுமன்றி தென்னிந்தியாவிலும் முதல் கிராமம் என்ற பெருமையை பெறும்.


கிராமத்தில் உள்ள மனித வளத்தை பயன்படுத்தி குறைந்த நிதியில் ஒரு தனித்துவமான திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் ஊராட்சி பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளதால் தான் ஹிந்தி கற்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் மற்றொரு தகவல்கள் உள்ளது. தமிழகத்தை போன்று கேரளாவிலும் தீவிர ஹிந்தி எதிர்ப்பை கடைபிடித்து வருகிறது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்த ஒரு கிராமம் ஹிந்தி கற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News