100 ஆண்டு பழமையான விநாயகர் சிலை - திடீரென மாயமான சம்பவம்!

நூறு ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை திடீரென மாயமானதால் அந்த பகுதியில் பரபரப்பு.

Update: 2022-09-21 00:35 GMT

இன்று வரை கிராமப்புற பகுதிகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டுமானால் புதியதாக வடிவமைக்கப்பட்ட சிலையை விட ஏதாவது ஒரு கோவில் உள்ள விநாயகர் சிலையை திரட்டி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். இவர்களுடைய இந்த மூடநம்பிக்கை காரணமாக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை திருடப்படும் சம்பவம் கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படுகிறது.


இதை ராகவா லாரன்ஸ் நடித்த பாண்டி என்ற திரைப்படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த திரைப்பட பாணியில் உசிலம்பட்டி அருகே விநாயகர் சிலை தற்போது மாயமாக்கி உள்ளது. மேலும் விநாயகர் சிலை திருட்டு போன சம்பவம் கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. உசிலம்பட்டி அருகே சலாம் பட்டி புதுப்பட்டி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த விநாயகர் சிலை உள்ளது.


இந்த கோவிலின் கருவறையில் இருந்து சுமார் மூன்று அடி உயரமான விநாயகர் சிலை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாகவும், கூறப்படுகிறது காலையில் கோவிலுக்கு வந்த கிராம மக்கள் சிலை திருட்டு போய் உள்ளதை கண்டு போல போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தார்கள். உடனே உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலைய போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து இங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் சிலையை திருடிய நபர்கள் கண்டுபிடிக்கப் படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News