ரூ.1,000 கோடி மதிப்பிலான 7 அருமையான திட்டங்கள்.. தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்..

Update: 2024-03-04 06:43 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் இருந்து ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களை மெய்நிகர் வடிவில் தொடங்கி வைத்தார். இந்தத் தொடக்க விழாவில் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், திட்டங்கள் தாமதமின்றி முடிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம் என்றும், கட்டுமானப் பணிகள் உரிய காலத்தில் தொடங்கப்படுவதையும், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்கள் முடிக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கான பல்வேறு முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அதிக அரசாங்கம் சிறப்பாக செய்து வருவதாகவும் அதற்கு இந்த ஒரு திட்டம் உதாரணமாக இருக்கும் என்று கூறினார். இதுபோன்ற திட்டங்கள் அதிகாரிகளின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் அதிகரிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் கூறினார். அமிர்த காலப்பகுதியில் தேசத்தைக் கட்டமைக்க அதிகாரிகள் தங்கள் கடமைகளை விடாமுயற்சியுடன் ஆற்ற வேண்டும் என்று சீதாராமன் மேலும் அறிவுறுத்தினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News