1,000 ஆண்டு பழமையான விநாயகர் சிலை கண்டுபிடிப்பு: பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததா?
ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை கண்டடுக்கப் பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் வரசக்தி விநாயகர் கோவில், ஒரு பழமையான சிலை இருப்பதாக அவரை சேர்ந்த கோவிந்தன் என்பவர் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் தாமரைக்கண்ணன் மற்றும் பொதுக்குழுத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த விநாயகர் சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய கற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது என்று தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர்கள் கூறும் பொழுது, இந்த சிலை இரண்டரை அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட ஒரு பழைய பழமை வகைகளில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நான்கு கரங்களுடன் அதில் வலது பின் கரத்தில் மடிவும், இடது கரத்தில் பாசமும் என்று ஆயுதம் உள்ளது. பாசம் என்கின்ற ஆயுத விநாயகரின் தாய் பார்வதி தேவியின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை தன் மகன் விநாயகனுக்கு தந்த அருளியதாக உள்ளது. வலது முன் காலத்தில் அபய முத்திரையுடன், முன் கருத்து படியும் சிற்பம் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
தலை கிரீடம் தரித்து அகண்ட இரண்டு காதுகளும் அழகான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு கரங்களிலும் ஆபரண அணிகலன் அணிந்தபடி இரண்டு கால்களிலும் வீரக்கலனை அணிந்தபடி முற்கால பாண்டியனுக்கே உரித்தான கைவண்ணத்தில் இந்த சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பார்க்கும் பொழுது மிளகு நல்லூர் முற்கால பாண்டியரின் சிவன் கோயில் இங்கு இருந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. காலப்போக்கில் அண்ணன் சிவன் கோயில் அழிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Dinakaran News