அடச்சீ!! பயன்படுத்திய உள்ளாடைகளில் முக கவசங்களை தயாரித்து அளித்த சீனா - பல் இளித்து வாங்கிய பாகிஸ்தான்!

அடச்சீ!! பயன்படுத்திய உள்ளாடைகளில் முக கவசங்களை தயாரித்து அளித்த சீனா - பல் இளித்து வாங்கிய பாகிஸ்தான்!

Update: 2020-04-05 06:18 GMT

சீன வைரஸ் கிருமியான கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட முக கவசங்கள் உள்ளாடையில் தயாரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, சீனா என இரு நாடுகளின் நிதியுதவியில் காலத்தை கழிக்கும் பாகிஸ்தான், தற்போது கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவ உபகரணங்கள் தேவை எனவும் இந்த மருத்துவ உபகரணங்கள் போக்குவரத்திற்காக சீன எல்லையான கூஞ்சரப் வாயிலை மார்ச் 27-ஆம் தேதி ஒரு நாள் திறக்கும் படி சீனாவை கில்ஜிட் பலிஸ்தான் மாகாண முதலமைச்சர் ஹப்வீசூர் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் லடாக், ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டிய பகுதிகளை போல் பாகிஸ்தானில் கில்ஜிட் பலிஸ்தான் மாகாணத்தை ஒட்டிய எல்லை பகுதிகளை கொண்டது சின்ஜியாங். இது சீனாவின் பட்டு பாதையில் முக்கிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள குஞ்சரப் எல்லை 1985 எல்லை ஒப்பந்தத்தின் படி நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை மூடப்பட்டு இருக்கும். இந்நிலையில் ஒருநாள் மருத்துவ உபகரணங்கள் போக்குவரத்திற்காக மார்ச் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

சின்ஜியாங் உய்குர் ஆளுநர் சோகரட் ஷகீர் பாகிஸ்தானில் உள்ள கில்ஜிட் பலிஸ்தான் மாகாணத்திற்கு 2 லட்சம் முக கவசங்களும் 2 ஆயிரம் மருத்து முக கவசங்களும் உள்ளடக்கிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி உள்ளதாக டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சிந்து மாகாணத்திற்கு பரிசோதிக்காமல் அனுப்பப்பட்ட முக கவசங்கள் கால் சட்டை உள்ளாடையில் தயாரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சீன மருத்துவ உபகரணங்கள் ஸ்பெயின், செக் குடியரசு, நெதர்லாந்து நாட்டிகளில் தரம் மற்ற குறைபாடுகள் கொண்டவை என தெரிவித்துள்ள நிலையில் பாகிஸ்தானிற்கு உள்ளாடையில் தயாரித்த முக கவச செய்தி சீன தயாரிப்புகள் மீது மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Source - Republic News

Similar News