அபரிதமான வளர்ச்சியில் செல்ல போகும் இந்திய ஏற்றுமதி.. மருந்து தொழில்நுட்பத் திட்டம்..

Update: 2024-05-08 16:43 GMT

புதுதில்லியில் இந்திய தொழில் வர்த்த சபையுடன் இணைந்து மருந்து தொழில்நுட்பத் திட்டம் 2024-ஐ மருந்தியல் துறை செயலாளர் தொடங்கி வைத்தார். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறை செயலாளர் டாக்டர் அருணீஷ் சாவ்லா, இந்திய தொழில் வர்த்தக சபையுடன் இணைந்து மருந்து தொழில்நுட்பத் திட்டம் 2024-ஐ புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். மருந்து தொழில்நுட்பத் திட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சாதனங்களின் விரிவான மதிப்பு சங்கிலி பகுப்பாய்வை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் மருந்து தொழில் நுட்பத் துறையில் மாறக்கூடிய அம்சத்தை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான முயற்சியாகும். தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் நெருக்கமான ஆலோசனை மூலம் இத்திட்டம், முக்கியமான சவால்களை எதிர் கொள்வது, உள்நாட்டு உற்பத்தியை வளர்ப்பது மற்றும் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதன் மூலம் மருந்து தொழில் நுட்பத்தில் இந்தியாவை உலகளாவிய தலைமைத்துவமாக நிலை நிறுத்துகிறது. இந்நிகழ்ச்சியில் மருந்தியல் துறை இணைச் செயலாளர் ஆர்.பி.சிங், இந்திய தொழில் வர்த்தக சபையின் தேசிய மருத்துவ தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் ஹிமான்ஷு பெய்ட், துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் அருணீஷ் சாவ்லா, இந்தியாவின் மருந்து தொழில்நுட்பம் அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், ஆண்டுதோறும் 28% வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடுவதாகவும், 2030ம் ஆண்டில் அதன் வர்த்தகம் 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டும் என்றும் கூறினார்.


தற்போது, ஆசியாவில் மருத்துவ சாதனங்களுக்கான 4-வது பெரிய சந்தையாகவும், உலகளவில் முதல் 20 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று அவர் கூறினார். 2022-23-ம் ஆண்டிற்கான நிகர இறக்குமதி 4101 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளால் இயக்கப்படும் இந்தத் துறை இறக்குமதியை அதிக அளவில் கண்டுள்ளது என்று செயலாளர் கூறினார். எனினும், இந்தியாவின் வலுவான கொள்கை ஏற்றுமதி ஊக்கங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதுடன் உள்நாட்டு உற்பத்தி மூலம் இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News