வாக்களிக்கும் போது பிரதமர் செய்த செயல்.... சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!

Update: 2024-05-07 13:51 GMT

இன்று 12 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுகள் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்குட்பட்ட ரானி பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். 

அப்பொழுது குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர் மேலும் பிரதமரை காணக் கூடியிருந்த மக்கள் உற்சாகத்தில் பிரதமரை வரவேற்றதோடு கூடியிருந்த குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தங்கள் வரைபடங்களை காட்டினார்கள், அப்பொழுது பிரதமர் அதில் கையெழுத்திட்டார். மேலும் பல குழந்தைகளை கையில் வாங்கியும் கொஞ்சினார். இது குறித்த வீடியோக்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதோடு தனது வாக்கினை செலுத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மக்கள் மிக எளிதாக எவ்வித சிரமமும் இன்றி ஜனநாயக திருவிழாவான தேர்தலில் வாக்களித்தனர். வன்முறை இல்லாத சிறப்பான ஏற்பாடுகளை செய்த தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

Source : Dinamalar 

Similar News