இண்டி கூட்டணி ஆட்சியைப் பெற்றால் ராமர் கோவிலுக்கு பாபர் பூட்டை போடுவார்கள் - அமித் ஷா!

Update: 2024-05-08 17:12 GMT

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் பாஜக சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது அதில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது, ராமர் கோவில் தேவையற்றது என ராம் கோபால் கூறியுள்ளார் ஒருவேளை அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார் ராமர் கோவிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள் என ராமர் கோவில் விவகாரம் தேவையற்றது என்று சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியதற்கு பதிலடி கொடுத்தார். 

மேலும் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ராமர் கோயில் விவகாரத்தில் முட்டுக்கட்டை போட்டு கொண்டே இருந்தது. ஆனால் மக்களாகிய நீங்கள் அனைவரும் பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக பிரதமராகியதால் அயோத்தி தொடர்பான சட்ட பிரச்சனைகள் முடிவு பெற்று அதில் வெற்றி பெற்றது! 

அதோடு எதிர்க்கட்சிகள் தங்கள் ஓட்டு வங்கியை பாதுகாக்க வேண்டும் என அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை, இப்படி ராமர் கோவிலை குறித்தும் அங்கு செல்வதற்கும் வெட்கப்படுபவர்களை உத்தரப்பிரதேசம் ஒருபோதும் ஆதரிக்காது என்று பேசினார். 

Source : Dinamalar 

Similar News