ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து - சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கும்.! #Covid19 #trainservice #indianrailway

ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து - சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கும்.! #Covid19 #trainservice #indianrailway

Update: 2020-06-26 02:56 GMT

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. புலம் பெயர்ந்த தொழி லாளர்களுக்காக ஷர்மிக் சிறப்பு ரெயில்களும் தனியாக இயக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் ரெயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டு உள்ளது

இதுகுறித்து இந்திய ரயில்வே வாரிய இயக்குனர் வி.சி.சுதீஷ் அனைத்து மண்டல முதன்மை தலைமை போக்குவரத்து மேலாளர்க ளுக்கு, அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியா முழுவதும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் ரத்து செய் யப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் பயணம் மேற்கொள்வதற்காக முன்ப தீவு செய்யப்பட்டுள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் ரத்து செய்து அதற்கான முழு தொகையை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதே நேரத்தில் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் அனைத்து சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்கலாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News