பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்..! ஆம் ஆத்மி கூட்டணியில் விருப்பமில்லாமல் காங்கிரஸிலிருந்து விலகல்....

Update: 2024-05-04 12:38 GMT

சமீபத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவர் காங்கிரஸிலிருந்து விலகிய நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். 

அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரசின் மூத்த தலைவராகவும் டெல்லி காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வந்த அரவிந்தர் சிங் லவ்லி தனது விருப்பத்திற்கு மாறாக கட்சி தலைமை ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்ததால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்துள்ளார். மேலும் இவருடன் காங்கிரசின் முன்னாள் எம்பிகளான ராஜ்குமார் சவுகான், நசீப் சிங் மற்றும் நீரஜ் பசோயாவும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அமித் மாலிக்கும் பாஜகவில் இணைந்துள்ளனர். 

Source : Dinamalar 

Similar News