காஷ்மீர், சி.ஏ.ஏ விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

காஷ்மீர் விவகாரம் மற்றும் சி.ஏ.ஏ தொடர்பாக ஐ.நாவில் பாகிஸ்தானால் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Update: 2024-05-04 13:19 GMT

ஐ.நா பொதுச் சபையில் காஷ்மீர் குடியுரிமை திருத்தச் சட்டம் அயோத்தி ராமர் கோயில் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி அளித்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் காஷ்மீர் குடியுரிமை திருத்தச் சட்டம் அயோத்தி ராமர் கோயில் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் வியாழக்கிழமை பேசினார். அவருக்கு தகுந்த பதில் அளித்து ஐநாவுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசியதாவது :-

தற்போதைய சவாலான காலகட்டத்தில் சமாதானம் நிலவும் சூழலை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது. ஆக்கபூர்வமான உரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்பதில் இந்தியாவின் கவனம் உறுதியாக உள்ளது. எனவே பாகிஸ்தான் தூதரின் கருத்துக்களை இந்தியா ஒதுக்கித் தருகிறது. பாகிஸ்தான் தூதரின் கருத்துகளில் நன்னடத்தை என்பது இல்லை. அத்துடன் அந்த கருத்துக்கள் படிப்படியாக கெடுதலையும் அழிவையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன .

ராஜிய உறவுகள் மற்றும் பரஸ்பரம் மரியாதையின் மையக் கோட்பாடுகளுடன் இணங்கி செயல்பட பாகிஸ்தானை இந்தியா அழுத்தமாக ஊக்குவிக்கிறது. அனைத்து மதங்களும் கருணை புரிதல் மற்றும் கூட்டு வாழ்க்கையை வலியுறுத்துகின்றன. மதங்களின் முக்கிய போதனைகள் மற்றும் சமாதானத்திற்கு நேர் எதிராக பயங்கரவாதம் உள்ளது என்றார். 


SOURCE :Dinamani

Similar News