140 கோடி மக்களின் உழைப்பு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும்.. மோடி அரசின் சபதம்..

Update: 2024-01-09 01:22 GMT

140 கோடி மக்களின் கனவுகளும், உழைப்பும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும். சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு. நாட்டின் 140 கோடி மக்களின் கனவுகளும், அவர்களது கடுமையான உழைப்பும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்று மத்திய தொழில், வர்த்தகம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.


சென்னை கொளத்தூர் தொகுதியில், நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒருவர் பட்டினியுடன் கனவு காண முடியும் என்றும், அதேசமயம் பட்டினியுடன் செயல்பட முடியாது என்றும் கூறினார். இதனால்தான், ஒரு குழந்தை கூட பட்டினியுடன் தூங்கச்செல்லக்கூடாது என்று எண்ணத்தில் பிரதமர் மோடி, 80 கோடி பேருக்கு இலவச உணவுதானியங்களை வழங்கி வருகிறார் என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 3.6 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.


பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட்டு வரும், ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா, பிரதமரின் வீட்டு வசதி திட்டம், கிராமப்புற சாலைகள் திட்டம் உள்ளிட்ட 17 மக்கள் நலத்திட்டங்கள் மூலம் அனைத்து மக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில், நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இத்திட்டங்களின் பயன்களை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த யாத்திரையின் நோக்கம் என்று அவர் கூறினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் ஒவ்வொருவரும் பயனடையும் வகையில் இந்த யாத்திரை மக்களின் வீட்டு வாசலுக்கு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News