கோவில்களுக்கு ஏன் செல்ல வேண்டும்? - அறிவியல் பார்வை.!

கோவில்களுக்கு ஏன் செல்ல வேண்டும்? - அறிவியல் பார்வை.!

Update: 2020-06-15 02:03 GMT

இந்தியா விலைமதிப்பில்லா அதன் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெயர் போன நாடு. இங்கே கோயில்கள் பல வடிவங்களில், பல இடங்களில், பல விதங்களில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் வேதங்களின் அடிப்படையிலேயே கட்டப்பட்டது. எனவே கோவில்களுக்கு செல்வதென்றால் பெரும்பாலனவர்கள், மன அமைதிக்காகவும், ஆண்டவனின் ஆசியை பெறுவதற்காகவும் செல்வதாக நினைத்து கொள்கிறார்கள். அது உண்மை தான் என்ற போதும், அது மட்டுமே காரணம் அல்ல. ஒருவர் கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு அறிவியல் ரீதியான பதில் இங்கே…

கோவில்களில் நேர்மறை அதிர்வுகள் அதிகமாக இருப்பது முக்கிய காரணம். அங்கே இருக்க கூடிய கர்பகிரகத்தில், அல்லது மூலஸ்தானத்தில் பூமியின் அதிக பட்ச காந்த அலைகள் எழுவதாக ஆய்வுகள் சொல்கின்றன, எனவே அந்த காந்த அலைகளும், நல்லதிர்வுகளும் ஒருவருக்கும் நல்ல மனநிலையை கொடுக்க வல்லது என்பதால் கோவில்களுக்கு செல்ல வேண்டி நம் மரபு நம்மை வலியுறுத்துகிறது.

மற்றொரு அறிவியல் காரணம், நம் காலணிகளை கோவிலுக்குள் செல்கிற போது நாம் கழற்றிவிட்டு செல்வதால் அதிலிருக்கக்கூடிய மாசு, அசுத்தம் போன்றவை ஏதுமின்றி கோவில் என்கிற புனித ஸ்தலம், மாசுகள் ஏதுமற்று தூய்மையாக இருக்கின்றன.

மேலும், கோவிலுக்கு செல்கிற போது, இறைவனை பார்த்தல், நல்ல இசையை, மந்திரங்களை கேட்டல், கற்பூரம், ஆராதனை, தூபம் போன்ற நல்ல வாசனையை நுகர்தல், தூய்மையான தீர்த்தம், பிரசாதம் ஆகியவை ருசித்தல், நல்ல அதிர்வுகளை உணர்தல் என ஐந்து புலன்களும் கோவில்களில் தூண்டப்படுவதால் கோவிலுக்கு செல்வதன் முக்கியத்துவம் நமக்கு வழிவழியாக உணர்த்தப்பட்டு வந்துள்ளது.

மேலும் கோவில்களிலுள்ல ஆலய மணிக்கு பின் பெரும் அறிவியல் இருப்பதாக சொல்லப்படுகிறது. கோவில் மணி அடிக்கிற போது அது எழுப்பும் சப்தம், நம் மூளையின் பகுதிகள் நல்ல சிந்தனைகளை தோற்றுவிப்பதாகவும், மணி அடித்து அடங்குகிற போது, 7 விநாடி அந்த ஓசை எதிரொலிக்கும், அந்த எதிரொலி நமக்குள் இருக்கிற தீய அல்லது, எதிர்மறை எண்ணங்களை களைய வல்லது என்கின்றன ஆய்வுகள்.

மேலும் கர்பகிரஹங்கள் பெரும்பாலும் அடர்த்தியான இருள் சூழ்ந்த நிலையில் கையாளப்பட்டு, விளக்குகள், கற்பூரங்கள் ஆரத்தி போன்றவை மட்டுமே ஏற்றப்படுகிற போது இருட்டில் ஒளிர்கிற அந்த மென்மையான வெளிச்சம், பார்வைக்கு உகந்தது எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் அங்கே கொடுக்கிற படுகிற குங்குமம், சந்தனம், விபுதி ஆகிய திலங்களை புருவங்களின் மத்தியில் இடுகிற போது ஒருவருடைய ஆஞ்க்யா சக்கரம் தூண்டப்படுகிறது.

மேலும் நாம் உடைக்கிற தேங்காய், வழங்கப்படுகிற தீர்த்தம், நாம் அர்பணிக்கிற பூக்கள், என கோவிலுனுள் நாம் மேற்கொள்கிற ஒவ்வொறு செயலுக்கு பின்னும் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்கள் வெறும் மெய்ஞானத்தை மட்டுமே ஆராதித்தவர்கள் அல்ல, விஞ்ஞானத்தையும் சேர்த்தே போதித்தவர்கள். அதனாலேயே நம் இந்து மரபு, அனைத்து விதங்களிலும் தனித்தன்மையுடன் விளங்குகிறது

Similar News