கங்கை நதி இந்துக்களின் உயிர் நாடி - ஆழமான பார்வை.!

கங்கை நதி இந்துக்களின் உயிர் நாடி - ஆழமான பார்வை.!

Update: 2020-06-16 01:27 GMT

ஒரு இடத்தை எது புனிதமாக மாற்றுகிறது. பொதுவாக ஒரு இடத்தில் நீண்ட காலம் ஒருவர் தவம் இயற்றி இருப்பாராயின் அந்த அதிர்வுகள் அங்கு நிலைத்திருக்கும் . அவரின் தவ வலிமையை பொருத்து அந்த இடத்தின் அதிர்வுகள் நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கு மேலோ உயிரோட்டத்துடன் இருக்கும். இந்தியாவில் அப்படி நிறைய இடங்கள் இருக்கின்றன அதில் மிக முக்கியமான ஒன்று பசவ நாத மலை.

இங்கு ஜெயின மதத்தைச் சார்ந்த 24 தீர்த்தங்கரர்கள் தவம் இயற்றி இருக்கிறார்கள். அவர்களின் தவ அதிர்வுகள் இன்றும் அந்த மலையில் நிரம்பியிருக்கிறது. பொதுவாக தவ வலிமை உள்ள ஒரு தீர்த்தங்கரர் உடலை விட்டுச் செல்லும் பொழுது, அணு சக்தி போன்ற அபரிமிதமான சக்தி வெளிக்கிளம்பும். உடலையும் உயிரையும் இணைத்து வைத்திருக்கின்ற அந்த சக்தி வெளிப்படும்போது அந்த இடம் முழுவதும் அதிர்வுகளால் நிரப்பிவிடும்.

ஜெயினர்களுக்கு எப்படி பசவ நாத மலையோ அதைப்போல் இந்துக்களுக்கு கங்கை. கங்கை இந்துக்களின் உயிர்நாடி போன்றது கங்கை வெறும் நதி மட்டுமல்ல அதையும் தாண்டிய பெருமை வாய்ந்தது. கண்ணன் கீதையில் சொல்கிறார் . "அர்ஜுனா ஆயுதம் ஏந்தியவர்களில் நான் ராமனை போன்றவன், நீரில் வாழும் ஜந்துக்களின் நான் முதலை போன்றவன், நதிகளில் நான் கங்கையைப் போன்றவன், " என்று கூறுகிறார். கங்கை அத்தனை சிறப்பு வாய்ந்தது .

ஏன் கங்கை இத்தனை சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது கங்கையை விட ஆழமானதும் அகலமானது நீளமானது உலகத்தில் எத்தனையோ நதிகள் இருக்கின்றன. நைல் நதி கங்கையை விட நீளமானது அமேசான் மிக அகலமானது ஆழமானது.

இப்படி எத்தனையோ நதிகள் இருக்கின்றன. ஆனால் கங்கைக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு . கங்கை நதி மிக மிக தூய்மையானது கங்கையை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருந்தாலும் நல்ல விதத்திலும் மற்றும் மோசமான விதத்திலும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனாலும் கங்கை மாசு அடையவில்லை கங்கையை மாசுப்படுத்தவும் இயலாது. இதுவே கங்கையின் இயல்பு . கங்கை நதியின தண்ணீரை எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் அது மற்ற தண்ணீரைப் போல் அது கெட்டுப்போவதில்லை. கங்கை நதியில் கலக்கும் கிளை நதிகள் கங்கை வந்தடைவதற்கு முன் அதன் தண்ணீரின் தன்மை இயல்பானதாக இருக்கும் கங்கையில் கலந்தவுடன் அதன் இயல்பு ஆச்சரிய படத்தக்க வகையில் மாறிவிடும்.

விஞ்ஞானிகலால் கூட இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் கங்கைக்கரையில் லட்சக்கணக்கான வருடங்கள் ஆன்மீகவாதிகள் ஞானம் அடைந்து இருக்கிறார்கள். தவம் இயற்றி இருக்கிறார்கள் இந்த அதிர்வுகள் எல்லாவற்றையும் கங்கை உள்வாங்கி இருப்பதே இதற்கு காரணம்

Similar News