₹15 லட்சம் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றிய NGO!
சமூக சேவை என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்வதும் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடுவதும் என்று இருக்கும் NGOக்கள் உண்மையில் காசு பார்க்கத் தான் இவ்வளவும் செய்கின்றன என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் விமானப்படை ஃபைட்டர் விமானம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் ஏவுகணை வெடித்து அதன் சிதறிய பாகங்கள் ஒடிசா மாநிலம் பாலாசோரில் வசிக்கும் மக்கள் சிலர் மீது விழுந்ததில் அவர்களுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி Human Rights Watch என்ற NGOவைச் சேர்ந்த சங்கீதா ஸ்வைன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மனு செய்துள்ளார்.
இதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹15 லட்சம் நிவாரணம் வழங்க இந்திய விமானப் படைக்கு உத்தரவிட்டது. விமானப்படையும் இந்த தொகையை செலுத்தி விட்டதாக ஆணையத்தில் ஆதாரத்தை சமர்ப்பித்தது. ஆனால் பிறகு தான் தெரிய வந்தது அந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேரவில்லை என்று.
எனவே மனித உரிமைகள் ஆணையம் பாலாசோர் மாவட்ட மாஜிஸ்திரேட்டை இது குறித்து விசாரித்து, அந்த ₹15 லட்சம் நிவாரணப் பணம் மக்களைச் சென்று சேர்ந்ததா என்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் பணமாகவோ, காசோலையாகவோ அல்லது வங்கிக் கணக்கிலோ எந்த விதத்திலும் இந்த நிவாரணத் தொகையைப் பெறவில்லை என்று தெரிய வந்தது.
அப்படி என்றால் பணம் எங்கு தான் சென்றது? பாதிக்கப்பட்டவர்கள் கடும் வேதனையில், மோசமான சூழ்நிலையில் வாழ்வதாக தெரிவித்த சங்கீதா ஸ்வைன் அந்த பணத்தை என்ன செய்தார்? தற்போது Human Rights Watch NGO மற்றும் சங்கீதா ஸ்வைன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் பணத்தை மீட்கவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.