1.50 லட்ச தமிழக பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம்...அயோத்தியில் முகாமிட்டு தமிழக பக்தர்களுக்கு உதவும் பாஜக குழு!
கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்திற்கு முன்பாகவே தமிழகத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் பக்தர்கள் அக்கோவிலை தரிசனம் செய்துள்ளனர். இதனை அடுத்து கும்பாபிஷேகத்திற்கு பிறகு தமிழக பக்தர்கள் எளிதில் அயோத்தி ராமர் கோவில் வந்து செல்வதற்கு உதவுவதற்காக பாஜக சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் கோபிநாத் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
மேலும் இந்த குழுவினர் கடந்த எட்டாம் தேதியிலிருந்து அயோத்தியில் முகாமிட்டு தமிழக பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழகத்தின் சென்னை, கோவை மற்றும் நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வழியே 16 சிறப்பு ரயில்கள் எனில் ஒரு ரயிலுக்கு 1,350 பேர் வீதம் 21,600 பேர் கடந்த எட்டாம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 21,600 பேர் அயோத்தி வந்து குழந்தை ராமரை தரிசித்து சென்றுள்ளனர்.
அதோடு வருகின்ற 29ஆம் தேதி வரை இன்னும் 18 சிறப்பு ரயில்கள் மூலம் பக்தர்கள் தமிழகத்தில் இருந்து வர உள்ளனர். மேலும் வாரணாசி, பாட்னா, லக்னோ வழியாகவும் தமிழக பக்தர்கள் அயோத்திக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு காசிக்கு சென்று அங்கும் தரிசனம் செய்கின்றனர். இப்படி ஏராளமான பக்தர்கள் ரயில்கள் மட்டுமின்றி விமானம், சுற்றுலா நிறுவனங்கள், ஏஜென்சிஸ், பஸ்கள், வேன்கள், காரிலும் அயோத்திக்கு படையெடுத்து வருவதாக பாஜக சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்திலிருந்து பிப்ரவரி 22ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து மட்டும் அயோத்தி ராமரை 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று.கூறியுள்ளார்.
Source : Dinamalar