ரூ.15,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்.. அயோத்தியில் தொடங்கி வைத்த பிரதமர்..

Update: 2023-12-31 01:54 GMT

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அயோத்தி தாமில் ரூ.15,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசம் முழுவதும் சுமார் ரூ. 4600 கோடி மதிப்புள்ள பிற திட்டங்களும் இதில் அடங்கும்.


முன்னதாக பிரதமர் மோடி சீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பல ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன் பின்னர், புதிதாக கட்டப்பட்ட அயோத்தி விமான நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அயோத்தி தாமில் இருப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தமது பேரணியின் போது உள்ள உற்சாகத்தையும் அவர் குறிப்பிட்டார். ஜனவரி 22-ம் தேதியை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் தானும் ராமர் கோவில் குடமுழுக்கு விழா நாளுக்காக ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943 ஆம் ஆண்டு இதே நாளில் அந்தமானில் மூவர்ணக் கொடியை ஏற்றியதையும் டிசம்பர் 30 ஆம் தேதியின் முக்கியத்துவத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். சுதந்திர இயக்கத்துடன் தொடர்புடைய புனிதமான நாளில், இன்று நாம் அமிர்த காலத்தின் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என்று அவர் மேலும் கூறினார். வளர்ச்சி அடைந்த பாரதம் இயக்கம் அயோத்தியில் இருந்து புதிய ஆற்றலைப் பெறுகிறது என்று கூறிய அவர், வளர்ச்சித் திட்டங்களுக்காக அயோத்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


இந்தத் திட்டங்கள் அயோத்தியை தேசிய வரைபடத்தில் மீண்டும் சிறந்த இடத்தில் நிறுவும் என்று அவர் கூறினார். வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டுவதற்கு பாரம்பரியத்தை பராமரிப்பது ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று பிரதமர் தெரிவித்தார். பழங்காலப் பாரம்பரியம் மற்றும் நவீனம் இரண்டையும் இணைத்து இன்றைய இந்தியா முன்னேறுகிறது என்று கூறிய அவர், 4 கோடி ஏழை குடிமக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டப்படுவதையும், பிரமாண்டமான கோயில் கட்டப்படுவதையும் எடுத்துரைத்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News