"ப்ளீஸ் எங்க பொருட்களை வாங்கிக்கோங்க!"- கெஞ்சாத குறையாக தள்ளுபடி‌ மேல் தள்ளுபடி அளிக்கும் சீன நிறுவனம் அலிபாபா.!

"ப்ளீஸ் எங்க பொருட்களை வாங்கிக்கோங்க!"- கெஞ்சாத குறையாக தள்ளுபடி‌ மேல் தள்ளுபடி அளிக்கும் சீன நிறுவனம் அலிபாபா.!

Update: 2020-07-04 10:28 GMT

சீன வீரர்களின் துரோக தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் இந்திய மக்களிடையே சீன எதிர்ப்பு மனநிலை மேலோங்கி வருகிறது. சீனாவையும் சீன தயாரிப்பு பொருட்களையும் எதிர்த்து போராட்டம் செய்வதோடு நில்லாமல் அவற்றைப் புறக்கணிக்கவும் தொடங்கி விட்டனர். இநீதிய அரசும் டிக் டாக், ஷேர் இட் போன்ற பிரபலமான 59 சீன செயலிகளைத் தடை செய்ததோடு‌ பல துறைகளிலும் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களையும் ரத்து செய்து வருகிறது.

இவ்வாறு பல நிலைகளிலும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரத்தில் இருந்து தங்களுக்கு அதிக சலுகைகள் தரப்படுவதாக அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் வணிகம் செய்யும் இந்திய வர்த்தகர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரம் வலுப்பெற்று வருவதால் அதை எதிர்கொள்ள எடுத்த நடவடிக்கையாக இருக்கலாம் என்றும்‌ கருத்து தெரிவித்துள்ளனர்.

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சீனப் பொருட்களை தடை செய்யக் கோரும் பிரச்சாரத்தை விரிவு படுத்தும் திட்டத்தைப் பற்றி கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்திருந்த வெபினாரில் கலந்து கொண்ட வர்த்தக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கருத்தை பகிர்ந்து கொண்டதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த வாரத்தில் இருந்து செம்பு, இரும்பு, வெள்ளிப் பொருட்களுக்கு நல்ல தள்ளுபடி தருவதாக 3-4 இமெயில்கள் தினமும் வருகின்றன. அவற்றுக்கு பதிலளிக்கவில்லை என்றால் தள்ளுபடியை மேலும்‌ 15% வரை உயர்த்தி அளிக்கின்றனர்" என்று‌ அனைத்திந்திய நகை வியாபாரிகள் மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நிதின் கேடியா இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சீனப் பொருட்களை ஆதரிப்பதைத் தவிர்க்குமாறு பாலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களுக்கு கோரிக்கை விடுத்ததோடு கொஞ்சம் கொஞ்சமாக சீனப் பொருட்களை தடை செய்யக் கோரும் பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சீனப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வரும் நிலையில் இந்திய அரசு ஆன்லைன் வரத்தகத்துக்கான புதிய விதிகளை வகுத்தது வருவதாக கூறப்படுகிறது. இந்த விதிகள் அமலுக்கு வந்த பின்னர் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்பது எளிதாவதோடு இந்திய நிறுவனங்கள் ‌சீன ஆதிக்கத்தை தகர்த்து சில்லறை வணிகத்தில் பெருமளவில் ஈடுபட உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News