லிபியாவில் சிறைபிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் மீட்பு

லிபியாவில் சிறைபிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் டெல்லி வந்தனர்.

Update: 2023-08-23 08:39 GMT

அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 17 பேர் லிபியாவில் ஆயுத குழு ஒன்றால் சிறைபிடிக்கப்பட்டு இருந்தனர். கடந்த மே மாதம் இறுதியில் விவகாரம் தெரிய வந்ததும் அவர்களை மீட்கும் பணிகளை துனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டது . தூதரகத்தின் சீரிய முயற்சியால் 17 இந்தியர்களையும் லிபியா அரசு கடந்த ஜூன் 13-ஆம் தேதி மீட்டது .ஆனால் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி 17 பேரையும் சிறையில் அடைத்தது.


இதைத் தொடர்ந்து மீண்டும் துனிசியாவில் உள்ள இந்திய தூதரக மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் லிபியி அரசுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி 17 இந்தியர்களையும் விடுவிக்க செய்தனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் 17 பேரும் நேற்று டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நாடு திரும்பிய தகவல்களை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தனர்.


லிபியாவில் அவர்கள் தங்கி இருந்த போது அவர்களுக்கு தேவையான உணவு ,மருந்து, உடைகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை இந்திய தூதரகம் வழங்கி இருந்ததுடன் நாடு திரும்புவதற்கான அவசர சான்றிதழ்களையும் வழங்கியதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News