நாட்டில் 17,500 இயற்கை எரிவாயு நிலையங்கள் அடுத்த ஆறாண்டுகளில் நிச்சயம் - அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி!

நாட்டில் 17,500 இயற்கை எரிவாயு நிலையங்கள் அடுத்த ஆறு ஆண்டுகளில் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-07 14:39 GMT

நாட்டில் அடுத்த ஆறு ஆண்டுகளில் 17,500 இயற்கை எரிவாயு நிலையங்கள் இருக்கும் என்று இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கெயில் நிறுவனம் சார்பில் மத்திய பிரதேசம் விஜயபூரில் ₹ 150 கோடியில் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் சிறிய அளவிலான திரவ இயற்கை எரிவாயு நிறுவனத்தையும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிறுவனங்களை டெல்லியில் இருந்து காணொலி வழியாக தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் பூரி தெரிவித்துள்ளதாவது :-


எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் நிலையான வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றின் ஒரு படியாக இந்த இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தூய்மையான நிலையான எரிபொருளை பொதுமக்கள் அணுகக் கூடிய வகையில் கிடைக்க செய்ய மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை தணிக்கும் முயற்சியில் இதுபோன்ற சி.என்.ஜி நிலையங்கள் தொடர்ச்சியாக தொடங்கப்படுகிறது.


கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் கூட்டு முயற்சிகளுக்கு இது ஒரு சான்று. நாட்டில் 2030 ஆம் ஆண்டிற்குள் எரிசக்தி இயற்கை எரிவாயுவின் பங்கு 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் .இதை முன்னிட்டு 2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் சுமார் 17,500 இயற்கை எரிவாயு நிலையங்களும் 12 கோடி வீடுகளுக்கு குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளும் இருக்கும் என்றார்.

SOURCE :Kaalaimani.com

Similar News