இந்தியாவில் நிகழ்கிற மொபைல் பேமென்ட் அமைப்பாக உள்ளது யுபிஐ 2016 நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வடிவமைத்து இதனை தொடங்கியது இந்த சேவை இந்தியாவில் 24 மணி நேரமும் பயன்படுத்தப்படுகிறது ஆரம்பத்தில் சாத்தியமாகுமா என நினைத்த இந்த திட்டம் தற்பொழுது பல மக்களின் பணப்பரிமாற்றத்தை எளிதாக்கியுள்ளது
அதோடு இந்த சேவை மூலம் ஆன்லைன் வர்த்தகமும் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது இந்த நிலையில் மே 2025-இல் யூபிஐ 18.68 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் புதிய சாதனை படைத்துள்ளது
இந்த உயர்வு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் யூபிஐயின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் பரவலான பயன்பாட்டை எடுத்துக்காட்டுகிறது