2 சீக்கிய சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் - மத்திய அரசிடம் புகார்!

Update: 2021-06-29 14:27 GMT

ஜம்மு காஷ்மீரில் முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சீக்கிய பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீக்கியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி முனையில் சீக்கியப் பெண்கள் இருவர் கடத்தப்பட்டு திருமணத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட இவர்களை ஒரு முதியவருக்கு திருமணம் செய்து வைத்து கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து சீக்கியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று டெல்லியில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்த சீக்கிய கூட்டமைப்பினர் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் பெரும்பான்மையினர் பலர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவத்தில் சீக்கிய சிறுமிகள் கடத்தப்பட்டு முதியவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News