காங்கிரஸ்,எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ராஜினாமா! கவிழ்கிறதா கர்நாடக அரசு!

காங்கிரஸ்,எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ராஜினாமா! கவிழ்கிறதா கர்நாடக அரசு!

Update: 2019-07-01 11:58 GMT

காங்கிரஸ், கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிகோலி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். அனந்த் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரை நேரில் சந்தித்து அளித்துள்ளார். ரமேஷ் ஜர்கிகோலி தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்துள்ளார்.


இந்நிலையில் இன்னும் சில காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அனந்த் சிங் கூறியுள்ளார். இது கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் சொகுசு விடுதியில் காங்கிரஸ்., எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில் அனந்த் சிங், மற்றொரு எம்.எல்.ஏ.,வால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் பின் காங்கிரஸ் கட்சிக்குள் பூசல் இருந்து வந்ததுதான், இன்று எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவிற்கு காரணம் என் கூறப்படுகிறது. கர்நாடகா முதல்வர் குமாரசாமி தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். இவ்வேளையில் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகையில் எந்த அரசியல் நகர்வு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு வேளை 20 உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முன்வந்தால், அவர்களின் ராஜினாமாவை நான் ஏற்பேன். ஆனால் அவர்கள் ராஜினாமா முடிவு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அனந்த் சிங் உள்ளிட்ட யாரையும் சந்திக்கவில்லை என்றார். சபாநாயகர் 20 எம்.ஏல்.எ ராஜினாமா என கூறியுள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி விரைவில் கவிழும் என் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


Similar News