இந்தியாவின் குடியரசு தின விழா 2023: முதல் முறையாக பங்கேற்கும் எகிப்து படைப்பிரிவு!

இந்தியாவின் குடியரசு தின நிகழ்ச்சியில் எகிப்து படை பிரிவினரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Update: 2023-01-20 03:11 GMT

இந்தியாவில் அரசியல் சாசன நடைமுறைக்கு வந்த பிறகு ஜனவரி 26ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகின்றது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில் சுமார் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றனர் எகிப்து படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கிறது. இது முதல் முறையாக நடக்கும் நிகழ்ச்சி ஆகும். ஏனெனில் எகிப்தில் படைவீரர்கள் இதில் கலந்து கொள்வது இது முதல் முறை ஆகும்.


மேலும் இதில் பங்கேற்பதற்காக பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்துல் பட்டா கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் ராஜபாதை கண்கவர் அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. வானில் இந்தியாவின் 50 போர் விமானங்கள் அணிவகுத்து சாகச வீரர்கள் சாகசத்தில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.


கடற்படை ஐ.எல் 38 விமானம் முதல் முறையாக இதில் கலந்து கொள்ள இருக்கிறது. இதுவே இது கடைசி முறையாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் இந்திய கடற்படையின் விமானம் ஆகும். இது கடற்படையில் 42 ஆண்டுகள் சேவையாற்று இருக்கிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்கின்ற 50 விமானங்களில் நான்கு விமானங்கள் ராணுவத்திற்கு உரியது ஆகும். மேலும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறுகின்ற அலங்கார ஊர்தி மாதிரிகளும் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News