2024 ஆண்டில் புதிய இலக்கை அடைய உள்ள இஸ்ரோ! ISS செல்ல உள்ள இந்திய விண்வெளி வீரர்! விண்வெளி அப்டேட்!
கடந்த திங்கள் கிழமை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், வரும் 2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.
முதலில் இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் தொடர்பான தொடர் சோதனையை இஸ்ரோ அடுத்த ஆண்டு நடத்தும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவின் விண்வெளி துறையை தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடுவதன் மூலம் உருவாக்கப்பட்ட சூழலின் காரணமாக இந்த முன்னேற்றங்கள் சாத்தியமாகியுள்ளது என்றும் இதனால் சந்திரயான் மூன்று மற்றும் ஆதித்யா போன்ற மெகா விண்வெளி நிகழ்வுகளின் ஏவுதலை சாதாரண மக்கள் காண முடிந்தது என்றும் தெரிவித்தார்.
அதோடு, விண்வெளியில் நடப்பு நிதியா ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 2023 வரையிலான கடந்த 9 மாதங்களில் இந்திய ரூபாய் 1000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது, அதுமட்டுமின்றி நான்காண்டுகளுக்கு முன்பு விண்வெளி துறையில் ஒரே ஒரு தொடக்கத்தில் இருந்தது, ஆனால் தற்பொழுது கிட்டத்தட்ட 190 தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப்கள் உள்ளது என்றும் கூறி பெருமிதம் அடைந்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், இந்தியாவின் முதல் சூரிய பயணமான ஆதித்யா எல் 1 அடுத்த மாத தொடக்கத்தில் துல்லியமாக, ஜனவரி 2024 முதல் வாரத்தில் அதன் இலக்கான லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1ஐ அடையும் என கூறினார். மேலும், பிரதமர் மோடியின் வாஷிங்டன் பயணத்தின் போது நாசா ஒரு இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்துள்ளது என்று அதுவும் அடுத்தாண்டு நடைபெறும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்.
Source : India defence news