2025-26 வரை பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!விவசாயிகளுக்கு லாபத்தை வழங்கும் இயக்கம்!

Update: 2025-02-17 16:12 GMT
2025-26 வரை பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!விவசாயிகளுக்கு லாபத்தை வழங்கும் இயக்கம்!

15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை ஒருங்கிணைந்த பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கமான அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியானை 2025-26 வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது ஒருங்கிணைந்த பிரதமரின் ஆஷா திட்டம் கொள்முதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் அதிக செயல்திறனை ஏற்படுத்தும் இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க உதவுவது மட்டுமல்லாமல் நுகர்வோருக்கு மலிவு விலையில் அத்தியாவசி வேளாண் விளைபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்

உள்நாட்டு பருப்பு உற்பத்தியை மேம்படுத்துவதில் பங்களிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் 2024-25 கொள்முதல் ஆண்டில் உற்பத்தியில் 100 சதவீதத்திற்கு சமமான அளவில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு உளுந்து மசூர் ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு அனுமதித்துள்ளது

மத்திய வேளாண்மை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் 2024-25 காரீஃப் பருவத்திற்கான விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஆந்திரா சத்தீஸ்கர் குஜராத் ஹரியானா கர்நாடகா மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா தெலுங்கானா உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13.22 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்

ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொள்முதல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News