2025-26 பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அரசு இல்லத் தங்குமிடங்களுக்கான முத்ரா கடன்களை அறிவித்த பாஜக:வெளியான விதிமுறைகள்!
2025-26 பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அரசு இல்லத் தங்குமிடங்களுக்கான அதாவது ஹோம்ஸ்டே முத்ரா கடன்களை அறிவித்துள்ளது இது இல்லத் தங்குமிடங்களை அதிகரிக்க வகை செய்யும்
பிரதமரின் பழங்குடியின கிராம மேம்பாட்டு இயக்கத்தின் ஒரு ஒரு பகுதியாக சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் பழங்குடியின இல்லத் தங்குமிடங்களை மேம்படுத்தும் முயற்சிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது புதிய கட்டுமானப் பணிகளுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலும் புதுப்பித்தலுக்கு ரூபாய் 3 லட்சம் வரையிலும் கிராம சமுதாயத் தேவைக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலும் நிதி உதவி வழங்கப்படும் இவ்வாறு 1000 இல்லத் தங்குமிடங்கள் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்படும் என மக்களவையில் மத்திய சுற்றுலா கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்