2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை தொடப்போகும் நகை விலை!! ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட தகவல்!!
கடந்த சில மாதங்களாகவே தங்க நகைகளின் விலை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் சர்வதேச சந்தையின் படி தங்க விலை 33% அதிகரித்துள்ளது.
இவ்வாறு தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பொருளாதர வளர்ச்சி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்பொழுது உள்ள சர்வதேச சந்தையில் 3400 டாலராக இருந்து வரும் நிலையில் 3600 டாலராக இந்த ஆண்டு இறுதிக்குள் உயரும் என்று கூறுகின்றனர். வரப்போகும் 2026 ஆம் ஆண்டின் பாதிக்குள் 3800 டாலர் வரை விலை உயர்வதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 24 காரட் தங்க விலை ஒரு லட்சத்தை தொட்டுள்ள நிலையில் மேலும் 10,000 அளவிற்கு விலை ஏறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தாண்டு தங்க விலையானது ரூ. 125000 வரை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் தொடர்பான முதலீடுகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சர்வதேச அளவில் தங்க விலை அதிகரித்து வருவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.