2026 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் 24 பெட்டிகள் கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்!
24 பெட்டிகள் கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் வரும் 2026 ஆம் ஆண்டுக்கு பயன்பாட்டிற்கு வர இருப்பதாக ஐ.சி.எஃப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஐ.சி.எப் பொது மேலாளர் சுப்பாராவ் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சுப்பாராவ் பேசியதாவது:-
ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் கடந்த நிதியாண்டில் 2829 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 53 வந்தே பாரத் ரெயில்கள் அடங்கும்.மேலும் கடந்த ஜூலை மாதம் வரை மட்டும் 75 வந்தேபாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது தற்போது 12 பெட்டிகள் கொண்ட வந்து மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வர உள்ளது பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொண்டு தற்போது மேற்கு ரயில்வேக்கு வந்தே மெட்ரோ ரயில் அனுப்பப்பட்டது ஐசிஎப் இல் 16 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் திரையில் தயாரிக்கப்பட்டு வருகிறது விரைவில் இதன் பணிகள் முடிவடையும் மேலும் 25 பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் இதன் மூலம் ரயில் அக்டோபர் மாத இறுதிக்குள் தயாராகும் மேலும் 24 பெட்டிகள் கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் திரையில் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் தொலைதூர பயணங்கள் எளிதாக மேற்கொள்ள முடியும் இந்த ரயில் வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் இதேபோல நடப்பு நிதியாண்டில் 3 ஆயிரத்து 457 ரயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எஃப் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்