2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு:இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது-மத்திய அரசு!

Update: 2025-06-16 13:28 GMT

2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று ஜூன் 16 வெளியிட்டதாக கூறப்படுகிறது 

ஜூன் 15 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மறுஆய்வுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் போன்ற உயர் மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர் கணக்கெடுப்புப் பணிகளில் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் 

வீட்டுப் பட்டியல் செயல்பாடு எனப்படும் முதல் கட்டம் வீட்டு நிலைமைகள்,வீட்டு சொத்துக்கள் மற்றும் வசதிகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும்.இரண்டாவது கட்டம் மக்கள்தொகை கணக்கீடு மக்கள்தொகை,சமூக-பொருளாதார,கலாச்சார மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது 

Tags:    

Similar News