2036 ஒலிம்பிக்கை இலக்காக வைத்து பட்ஜெட்டில் மாஸ் காட்டிய ஹரியானா பாஜக அரசு!

Update: 2025-03-18 16:01 GMT
2036 ஒலிம்பிக்கை இலக்காக வைத்து பட்ஜெட்டில் மாஸ் காட்டிய ஹரியானா பாஜக அரசு!

ஹரியானா முதலமைச்சர் நயாப் சைனி கடந்த மார்ச் 17 இல் மாநில நிதியமைச்சராக தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அவரது பட்ஜெட் கல்வி மற்றும் விவசாயத் துறைக்கு பல ஏற்பாடுகளைச் செய்ததாக கூறப்படுகிறது

அதாவது பெண்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 2,100 வழங்குவதாக பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் லடோ லட்சுமி யோஜனாவை செயல்படுத்த ஹரியானா முதல்வர் ரூபாய் 5,000 கோடியை ஒதுக்கினார் நெல் சாகுபடியைத் தொடர்வதற்குப் பதிலாக விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பன்முகப்படுத்த விரும்பினால் ஏக்கருக்கு தற்போதுள்ள ரூபாய் 7,000-லிருந்து ரூபாய் 8,000ஆக ஊக்கத்தொகையை பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளார் 

மேலும் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமான வைக்கோல் எரிப்பு பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக நெல் வைக்கோலை நிர்வகிக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் ஏக்கருக்கு ரூபாய் 1,000லிருந்து ரூபாய் 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது போலி விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் முன்மொழியியுள்ள சட்டத்தால் விவசாய சமூகம் பயனடையும் என்று ஹரியானா பாஜக பொறுப்பாளர் சதீஷ் பூனியா கூறியுள்ளார்

அதுமட்டுமின்றி 2036 ஒலிம்பிக்கில் குறைந்தது 36 பதக்கங்களை வெல்லும் நோக்கில் ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீட்டில் மிஷன் ஒலிம்பிக்ஸ் 2036 விஜயி பவா முயற்சியை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார் 

Tags:    

Similar News