அனைத்து மாநிலங்களுக்கும் 22 லட்சம் டன் இலவச உணவுப் பொருள்கள் இதுவரை சப்ளை: சொன்னபடி செய்யும் மத்திய அரசு.!

அனைத்து மாநிலங்களுக்கும் 22 லட்சம் டன் இலவச உணவுப் பொருள்கள் இதுவரை சப்ளை: சொன்னபடி செய்யும் மத்திய அரசு.!

Update: 2020-04-15 11:00 GMT

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தார். இதனால் வீட்டில் உள்ள மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக பிரதம மந்திரி காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ், 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இலவசமாக வழங்கப்படும் இந்த ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு தொடர உள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வினியோகிப்பதற்காக இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் இருந்து 22 லட்சம் டன்கள் அளவு உணவு தானியங்கள் நேற்று முன்தினம் வரை ( 13 ந்தேதி ) விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலியா ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Similar News